உங்கள் வேலைக்கு அங்கீகாரம் தேவை! உங்கள் பெயரை அல்லது நீங்கள் அறிந்த வேறு ஒரு வெற்றிகரமான பெண் தொழில்முனைவோரின் பெயரையோ பரிந்துரைத்து, உங்கள் திறமையை இந்த உலகிற்கு வெளிப்படுத்துங்கள்.

யார் சுயசக்திகள்?

நிறைய பெண்கள் வீட்டிலிருந்தபடியே சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில்களை வீட்டிலிருந்தபடியே செய்து வருகிறார்கள். அதிலிருந்து வரும் வருமானம் அவர்கள் சம்பாத்தியமாகவோ குடும்பத்தின் வருமானத்திற்கு உதவுவதாகவோ அமைகிறது. இப்பெண்களே சுயசக்திகளாக கருதப்படுகின்றனர். ஆங்கிலத்தில் சொல்வதானால் ஹோம்டபிரனர் . இதை ஆங்கில வேர்வார்த்தையான -ஆன்டபிரனர் என்னும் சுயதொழில் முனைவோரிலிருந்து உருவாக்கப்பட்டது. வீட்டிலிருந்து தொழில் செய்வோர் ஹோம்டபிரனைர் என்று அழைக்கப்படுவது இவ்வாறே.
ஹோம்டபனர் விருதுகள் – சுயசக்தி விருதுகள் பெண்களைக் கொண்டாடும் ஒரு தளமாகவும் அவர்களின் திறமைகளையும் ஆர்வத்தையும் அதன்பொருட்டு வீட்டிலிருந்து அவர்கள் செய்யும் தொழிலையும் அங்கீகரிக்கும் மேடையாகவும் அமைகிறது. அவர்களின் தொழில் எதுவாகவும் இருக்கலாம் – கேக் செய்வதிலிருந்து அதை செய்ய கற்றுக் கொடுத்தல் வரை இந்த இணையதளத்தில் குறிப்பிட்டு இருக்கும் பல பிரிவுகள் உட்பட..உங்கள் சுயதொழில் மூலமாக நீங்கள் வருமானம் அடைபவராக இருந்தால் , நீங்களே சுயசக்தி விருதுகளுக்கு குறிப்பிடப்பட்டிருக்கும் பல்வேறு பிரிவுகளில் விண்ணப்பிக்க தகுதியானவர்.
இந்த நிகழ்வின் முக்கிய பகுதியாக விண்ணப்பிக்கும் ஒருவர் ஒரு முதலீட்டாளரிடமிருந்து முதலீடு பெற தேர்ந்தெடுக்கப்பட்டு அவரது தொழில் மேலும் விரிவாக வழிகாட்டுதலும் முதலீடும் கொடுக்கப்படும். செயல்திறன் கருதியும் அள்வீடுதல் மற்றும் தலைமை மாண்பு கருதியும் அந்த குறிப்பிட்ட பெண் தேர்ந்தெடுக்கப்படுவார்

எங்களை பற்றி

பிராண்ட் அவதார்

ப்ராண்ட் அவதார் என்னும் எங்கள் நிறுவனம் கடந்த இரண்டு வருடங்களாக ப்ராண்டிங் மற்றும் நிகழ்ச்சி மேலாண்மை சார்ந்த ஈவெண்ட் மேனேஜ்மெண்ட் நிகழ்வுகளை- மிக முக்கியமான மற்றும் தனித்துவமான பிரம்மாண்ட நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்தி வருகின்றது. “ப்ரைட் ஆஃப் தமிழ்நாடு . பேஷன் ப்ரீமியர் வீக்” போன்ற்வை அவற்றுள் சில. மட்டுமல்ல. கூடவே ப்ராண்ட் அவதார்தொழிற்நிறுவனங்களுக்கு ஒருங் கிணைந்த சந்தைப்படுத்துதல் தொடர்பான தகவல் தொடர்புகளை ஏற்படுத்திக் கொடுக்கவும் ப்ராண்டிங் மேலாண்மை தொடர்பான தீர்வுகளை நிறுவனங்களுக்கும் தனிநபர்களுக்கும் சீரிய முயற்சியை சாத்தியமாக்குகிறது.தற்போது நமது ப்ராண்ட் அவதார் ஒரு தனித்துவமான முயற்சிக்கு வித்திட்டிருக்கிறது – சுயசக்தி விருதுகள் என அழைக்கப்படும் அவ்விருதுகள் வீட்டிலிருந்தபடியே சுயதொழில் செய்து தன்னம்பிக்கையுடன் சம்பாதித்து வாழும் பெண்களுக்கு அளிக்கப்படுகிறது

இந்நிறுவனத்தின் நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியாக செயலாற்றும் திரு. ஹேமசந்திரன் ஜனவரி

2016ல் ஆரம்பிக்கப்பட்ட புதுவகையான விளையாட்டு- பொழுதுபோக்கு போட்டியை தற்போது பான் இந்தியா ப்ராப்பர்டியாக மூன்று நகரங்களில் சீசன் 1 நடைபெறும் செலிபிரிட்டி பேட்மிண்டன் லீக் போட்டிகளின் நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியும் ஆவார். செலிபிரிட்டி பேட்மிண்டன் லீக் போட்டியின் இறுதி சுற்று மலேஷியாவில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. அவர் ஒரு மிக திறன் வாய்ந்த முதலீட்டாளராகவும் திகழ்கிறார். அதன் ஒரு முக்கிய பங்காக சென்னை ஏஞ்சல்ஸ் மற்றும் இண்டியன் ஏஞ்சல்ஸ் நெட்வொர்க்கில் உறுப்பினராக உள்ளார்.

தனது பொறியியற் படிப்பை கிரசண்ட் பொறியியற் கல்லூரியில் முடித்த திரு.ஹேமசந்திரன் 25க்கும் மேற்பட்ட புத்தகங்களை அண்ணா மற்றும் சென்னை பல்கலைக்கழக பாடத்திட்டத்திற்காக அவர் மாணவராய் இருக்கும் போதே எழுதியவர். மிகுந்த தன்முனைப்பு கொண்ட தொழிலதிபரான ஹேமசந்திரன் தன்னிந்தியாவில் ஒருங்கிணைந்த தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்துவதன் மூலம் தொழிலதிபர்களுக்கும் முதலீட்டாளர்களுக்குமான இடைவெளி குறைய வேண்டுமென விரும்புபவர். அதற்கான வெளிப்படையான முயற்சிகளை உற்சாகமாக மேற்கொள்பவர்.

இன்றைய நவீன அரசியல் நிலைப்பாடான” வளர்ச்சி சார் அரசியல் “குறித்து பெரும் ஈடுபாடு கொண்ட அவர் 2006ல் ஆரம்பிக்கப்பட்ட ஐ ஐ டியை சார்ந்தவர்கள் தொடங்கிய அரசியல் கட்சியின் மாநில பொது செயலாளராக இருந்து பல இளைஞர்களுக்கு கல்வியறிவு தரும் வாய்ப்புகளை ஏற்படுத்தினார். அக்குழுவினருக்குள்ளே பொது செயலாளராக செயலாற்றினார். அவ்விளைஞர் கட்சி 2006ல் 34000 வாக்குகளை தமிழக தேர்தலில் பெற்றது குறிப்பிடத்தக்கது.

பிரிவுகள்

விவசாயம்

தோட்டக்கலை வல்லுநர்கள், பண்ணை விவசாயம், விவசாயம் சார் பொருட்கள், பிற

உணவு & பானங்கள்

பானங்கள், சமையல் நிபுணர், பேக்கரி நிபுணர், பிற

ஆரோக்கிய பராமரிப்பு

ஊட்டச்சத்து நிபுணர், குழந்தை பராமரிப்பாளர், மருத்துவ பயிற்சி பெற்றவர், மருத்துவர், பிற

வீட்டு சில்லறை விற்பனை

தையல்காரர், பூத்தையல், அழகு சாதனக் கடை, பிற

கலை &கலாசாரம்

முக ஓவியர், கைப்பாவை கலைஞர், வாத்திய இசைக்கலைஞர், வாய்ப்பாட்டு, நடனம், கவிதை, சுவரோவியம், நகை வடிவமைப்பாளர், ஓவியர், மெழுகுவர்த்தி தயாரிப்பவர், அலங்கார கைவினைப் பொருட்கள், கம்பளம் தயாரிப்பவர், விளையாட்டுப் பொருட்கள் தயாரிப்பவர், பாட்டு ஆசிரியர், நடன ஆசிரியர், மணல் ஓவியர், மிமிக்ரி வல்லுனர், பரிசு பொருள் தயாரிப்ப்வர், பிற

கல்வி & இலக்கியம்

எழுத்தாளர், பயிற்சியாளர், எழுத்து வடிவாக்குபவர் -ட்ரான்ஸ்கிரைபர், பிற

அழகு & ஆரோக்கியம்

தோற்ற பொலிவு நிபுணர், ஆளுமை பயிற்சி நிபுணர், மெஹந்தி கலைஞர், அழகுக்கலை நிபுணர், சிகைஅலங்கார நிபுணர், நக அலங்கார கலைஞர், மசாஜ் நிபுண்ர், சேலை கட்டும் நிபுணர், பிற

ஊடகம் & பொழுதுபோக்கு

நிகழ்ச்சி திட்ட வடிவமைப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், பதிவர், தயாரிப்பு விமர்சகர், பத்திரிகையாளர், திரையரங்கு கலைஞர், இயக்குனர், உள்ளடக்க எழுத்தாளர், கிரியேட்டிவ் நகல் எழுத்தாளர், பதிப்பாசிரியர், நடிகர், நிகழ்ச்சி தொகுப்பாளர்கள், படத்தொகுப்பு, பாடலாசிரியர், ஆடை வடிவமைப்பாளர், கிராபிக் டிசைனர், நடனகலைஞர், புகைப்படக்கலைஞர், ஒலிச் சேர்க்கைகலைஞர்

  • நகர்பட நிபுணர்
  • கண்காட்சி திட்ட வடிவமைப்பாளர்
  • பட இயக்குநர்
  • இசையமைப்பாளர்
  • பின்ணணணி பாடகர்
  • பிற

விளையாட்டு & உடற்பயிற்சி

யோகா ஆசிரியர், ஜும்பா பயிற்றுவிப்பாளர், ஏரோபிக்ஸ் பயிற்றுவிப்பாளர், நீச்சல் பயிற்சியாளர், விளையாட்டு பயிற்சியாளர், தியான பயிற்சியாளர், உடற்பயிற்சி ஆலோசகர், பிற

உங்கள் வீட்டு வணிக்தை விரிவாக்க ஒரு அற்புதமான வாய்ப்பு, வழிகாட்டுதல் ஆதரவு மற்றும் அளவிடுதல் வாய்ப்புகளை பெற!

நடுவர் குழு உறுப்பினர்கள்

புகைப்படங்கள்

செயலாக்கத்திட்டம்

05-ஜூன்-2018

பத்திரிகையாளர் சந்திப்பு/போர்டல் வெளியீடு

06-ஜுலை-2018

போர்டல் முடிகிறது

நடுவர் குழு சந்திப்பு

14-ஜுலை-2018

தேர்வுசெய்யப்பட்ட வேட்பாளர்களுக்கான நேர்காணல்

05-ஆகஸ்ட்-2018

முக்கிய நிகழ்வு

ஒளிபரப்பப்பட்ட நிகழ்வு
10
CATEGORIES
11
JURY MEMBERS
எங்கள் நிகழ்வை பகிர

ஸ்பான்சர்ஸ்

பார்ட்னர்ஸ்

Website Partner

Gadget Partner

Photo & Video

Reach Partner

Reach Partner

Invite Partner

Auto Partner

Magazine Partner

Reach Partner

Automobile Partner

Confectionary Partner

Eco-System Partner

Radio Partner

Outreach Partner

NGO Partner

Magazine Partner

Hospitality Partner

Gift Partner

Multiplex Partner

Digital Partner

சமூக வலைத்தளங்களிள் எங்களைப் பின்தொடர்

பிராண்ட் அவதார்

முகவரி

கந்தசாமி கரமணி தெரு, சந்திர பாக் அவன்யூ சாலை,
ஹோட்டல் கிளாரினுக்கு எதிர்புற சாலை டாக்டர் ராதா கிருஷ்ணன் சாலை, மைலாபூர் சென்னை, தமிழ்நாடு 600004.

மின்னஞ்சல் முகவரி: [email protected]

நீங்கள் வீட்டில் இருந்தே வெற்றிகரமாக வணிகம் செய்யும் ஒரு பெண் தொழிலதிபரா? அல்லது வேறு ஒரு பெண் தொழில்முனைவோரைத் தெரியுமா? உங்களது/அவர்களது பெயரை சுயசக்தி விருதுகளுக்கு பரிந்துரைக்கவும்.