homepreneurawards
homepreneurawards
ப்ராண்ட் அவதார் என்னும் எங்கள் நிறுவனம் கடந்த இரண்டு வருடங்களாக ப்ராண்டிங் மற்றும் நிகழ்ச்சி மேலாண்மை சார்ந்த ஈவெண்ட் மேனேஜ்மெண்ட் நிகழ்வுகளை- மிக முக்கியமான மற்றும் தனித்துவமான பிரம்மாண்ட நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்தி வருகின்றது . "ப்ரைட் ஆஃப் தமிழ்நாடு . பேஷன் ப்ரீமியர் வீக்" போன்ற்வை அவற்றுள் சில. மட்டுமல்ல. கூடவே ப்ராண்ட் அவதார்தொழிற்நிறுவனங்களுக்கு ஒருங் கிணைந்த சந்தைப்படுத்துதல் தொடர்பான தகவல் தொடர்புகளை ஏற்படுத்திக் கொடுக்கவும் ப்ராண்டிங் மேலாண்மை தொடர்பான தீர்வுகளை நிறுவனங்களுக்கும் தனிநபர்களுக்கும் சீரிய முயற்சியை சாத்தியமாக்குகிறது.தற்போது நமது ப்ராண்ட் அவதார் ஒரு தனித்துவமான முயற்சிக்கு வித்திட்டிருக்கிறது - சுயசக்தி விருதுகள் என அழைக்கப்படும் அவ்விருதுகள் வீட்டிலிருந்தபடியே சுயதொழில் செய்து தன்னம்பிக்கையுடன் சம்பாதித்து வாழும் பெண்களுக்கு அளிக்கப்படுகிறது

இந்நிறுவனத்தின் நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியாக செயலாற்றும் திரு. ஹேமசந்திரன் ஜனவரி 2016ல் ஆரம்பிக்கப்பட்ட புதுவகையான விளையாட்டு- பொழுதுபோக்கு போட்டியை தற்போது பான் இந்தியா ப்ராப்பர்டியாக மூன்று நகரங்களில் சீசன் 1 நடைபெறும் செலிபிரிட்டி பேட்மிண்டன் லீக் போட்டிகளின் நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியும் ஆவார். செலிபிரிட்டி பேட்மிண்டன் லீக் போட்டியின் இறுதி சுற்று மலேஷியாவில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. அவர் ஒரு மிக திறன் வாய்ந்த முதலீட்டாளராகவும் திகழ்கிறார். அதன் ஒரு முக்கிய பங்காக சென்னை ஏஞ்சல்ஸ் மற்றும் இண்டியன் ஏஞ்சல்ஸ் நெட்வொர்க்கில் உறுப்பினராக உள்ளார்.

தனது பொறியியற் படிப்பை கிரசண்ட் பொறியியற் கல்லூரியில் முடித்த திரு.ஹேமசந்திரன் 25க்கும் மேற்பட்ட புத்தகங்களை அண்ணா மற்றும் சென்னை பல்கலைக்கழக பாடத்திட்டத்திற்காக அவர் மாணவராய் இருக்கும் போதே எழுதியவர். மிகுந்த தன்முனைப்பு கொண்ட தொழிலதிபரான ஹேமசந்திரன் தன்னிந்தியாவில் ஒருங்கிணைந்த தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்துவதன் மூலம் தொழிலதிபர்களுக்கும் முதலீட்டாளர்களுக்குமான இடைவெளி குறைய வேண்டுமென விரும்புபவர். அதற்கான வெளிப்படையான முயற்சிகளை உற்சாகமாக மேற்கொள்பவர்.

இன்றைய நவீன அரசியல் நிலைப்பாடான" வளர்ச்சி சார் அரசியல் "குறித்து பெரும் ஈடுபாடு கொண்ட அவர் 2006ல் ஆரம்பிக்கப்பட்ட ஐ ஐ டியை சார்ந்தவர்கள் தொடங்கிய அரசியல் கட்சியின் மாநில பொது செயலாளராக இருந்து பல இளைஞர்களுக்கு கல்வியறிவு தரும் வாய்ப்புகளை ஏற்படுத்தினார். அக்குழுவினருக்குள்ளே பொது செயலாளராக செயலாற்றினார். அவ்விளைஞர் கட்சி 2006ல் 34000 வாக்குகளை தமிழக தேர்தலில் பெற்றது குறிப்பிடத்தக்கது.
hemachandran
homepreneurawards
homepreneurawards
வீட்டிலிருந்து சுயதொழில் செய்யும் பெண்ணே அவர்
நிறைய பெண்கள் வீட்டிலிருந்தபடியே சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில்களை வீட்டிலிருந்தபடியே செய்து வருகிறார்கள். அதிலிருந்து வரும் வருமானம் அவர்கள் சம்பாத்தியமாகவோ குடும்பத்தின் வருமானத்திற்கு உதவுவதாகவோ அமைகிறது. இப்பெண்களே சுயசக்திகளாக கருதப்படுகின்றனர். ஆங்கிலத்தில் சொல்வதானால் ஹோம்டபிரனர் . இதை ஆங்கில வேர்வார்த்தையான -ஆன்டபிரனர் என்னும் சுயதொழில் முனைவோரிலிருந்து உருவாக்கப்பட்டது. வீட்டிலிருந்து தொழில் செய்வோர் ஹோம்டபிரனைர் என்று அழைக்கப்படுவது இவ்வாறே.
பெண்களை அடையாளப்படுத்தும் முக்கியமான தளம்:
ஹோம்டபனர் விருதுகள் - சுயசக்தி விருதுகள் பெண்களைக் கொண்டாடும் ஒரு தளமாகவும் அவர்களின் திறமைகளையும் ஆர்வத்தையும் அதன்பொருட்டு வீட்டிலிருந்து அவர்கள் செய்யும் தொழிலையும் அங்கீகரிக்கும் மேடையாகவும் அமைகிறது. அவர்களின் தொழில் எதுவாகவும் இருக்கலாம் - கேக் செய்வதிலிருந்து அதை செய்ய கற்றுக் கொடுத்தல் வரை இந்த இணையதளத்தில் குறிப்பிட்டு இருக்கும் பல பிரிவுகள் உட்பட..உங்கள் சுயதொழில் மூலமாக நீங்கள் வருமானம் அடைபவராக இருந்தால் , நீங்களே சுயசக்தி விருதுகளுக்கு குறிப்பிடப்பட்டிருக்கும் பல்வேறு பிரிவுகளில் விண்ணப்பிக்க தகுதியானவர்.
சுயசக்தியிலிருந்து முழுசக்தியாய் - ஹோம்டபனரிலிருந்து ஆன்டபனராக
இந்த நிகழ்வின் முக்கிய பகுதியாக விண்ணப்பிக்கும் ஒருவர் ஒரு முதலீட்டாளரிடமிருந்து முதலீடு பெற தேர்ந்தெடுக்கப்பட்டு அவரது தொழில் மேலும் விரிவாக வழிகாட்டுதலும் முதலீடும் கொடுக்கப்படும். செயல்திறன் கருதியும் அள்வீடுதல் மற்றும் தலைமை மாண்பு கருதியும் அந்த குறிப்பிட்ட பெண் தேர்ந்தெடுக்கப்படுவார்
homepreneurawards
Mariazeena Johnson டாக்டர் மரியஜீனா ஜான்சன்
துணை வேந்தர்,
சத்யபாமா பல்கலைக்கழகம்
Veena Kumaravel வீணா குமாரவேல்
இணை நிறுவனர்,
நேச்சுரல்ஸ் சலூன்
Hema Rukmani ஹேமா ருக்மணி
தலைமை நிர்வாக அதிகாரி,
தேனாண்டாள் எண்டர்டெயிண்மெண்ட்
Poornima Ramasamy பூர்ணிமா ராமசாமி
தேசிய விருது பெற்ற வடிவமைப்பாளர் ,
ஒப்பனையாளர் &தொழிலதிபர்
Dhivyadharshini திவ்யதர்ஷினி
நிகழ்ச்சி தொகுப்பாளர்
Dr.Saundarya Rajesh டாக்டர் சவுந்தர்யா ராஜேஷ்
நிறுவனர் - தலைவர்,
அவதார் கரியர் கிரியேட்டர்ஸ் மற்றும் ப்ளெக்சி கரியர்ஸ், இந்தியா
Aruna Subramanian அருணா சுப்ரமணியன்
அறங்காவலர்,
பூமிகா ட்ரஸ்ட்
Rohini Manian ரோஹிணி மணியன்
தலைமை நிர்வாக அதிகாரி,
குளோபல் அட்ஜெஸ்ட்மெண்ட்ஸ் பிரைவேட் லிமிடட்
nalini ramalakshmi நளினி ராமலக்ஷ்மி
நிறுவனர்,
பரென்ட் சிர்ச்லே மகஜினே
homepreneurawards
  1. பத்திரிகையாளர் சந்திப்பு/இணையதளம் திறத்தல்
  2. இணையதளம் மூடல்
  3. நடுவர் குழு சந்திப்பு
  4. இறுதி சுற்று வெற்றியாளர்களைப் பட்டியிலிடுதல்
  5. நேரடி நிகழ்வு
homepreneurawards
பிராண்ட் அவதார்